பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்ன கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்

பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்ன கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்-CD Wickramaratne Arrived at Trial-at-Bar-Colombo High Court

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான உரிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட 855 குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்ன கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் இன்றையதினம் (29) நீதிமன்றில் ஆஜராகுமாறு சீ.டி. விக்ரமரத்னவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

இவ்வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றில், நீதியரசர்களான நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஷதீன் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸின் கேள்விகள் மூலம் பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்னவின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.