சுவீடனின் முதல் பெண் பிரதமர் சில மணி நேரத்தில் விலகினார்

சுவீடனில் முதலாவது பெண் பிரதமராக மக்டெலேனா அன்டர்சன் நியமிக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே பதவி விலகியுள்ளார்.

கடந்த புதன்கிழமை மக்டெலேனா பிரதமராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது கூட்டணி கட்சி அரசில் இருந்து விலகி, வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்ததை அடுத்தே அவர் பதவி விலகியுள்ளார். பதிலாக, குடியேற்ற எதிர்ப்பு தீவிர வலதுசாரியினர் உட்பட எதிர்க்கட்சி மூலம் வரையப்பட்ட பட்ஜெட் ஒன்றுக்கு பாராளுமன்றம் ஆதரவாக வாக்களித்தது.

“நான் பதவி விலக விரும்புவதாக சபாநாயகரிடம் கூறினேன்” என்று மக்டெலேனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “தீவிர வலதுசாரிகளுடன் முதல்முறை வரையப்பட்ட பட்ஜெட் ஒன்றை ஏற்க முடியாது என்று அவரது கூட்டணியில் இருந்து விலகிய பசுமைக் கட்சி குறிப்பிட்டது. ஒரு ஒற்றை கட்சி அரசின் தலைவராக மீண்டும் பிரதமர் பதவிக்கு வர முயற்சிப்பேன் என்று மக்டெலேனா குறிப்பிட்டார்.

அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கட்சி தலைவர்களுடன் தாம் பேசவிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.