ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாக அவுஸ்திரேலியா அறிவிப்பு

ஈரான் ஆதரவு லெபனானைத் தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பை ‘பயங்கரவாத’ குழுவாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அந்த அமைப்பின் ஒட்டுமொத்த பிரிவுகளும் இதில் உள்ளடக்கப்படுவதாக அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா இராணுவ பிரிவுக்கு 2003 தொடக்கம் தடை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்கா கடந்த மே மாதம் கோரி இருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவான செயற்பாட்டில் ஈடுபட்டதாக லெபனானைத் தளமாகக் கொண்ட அல்–கர்த் அல்–ஹசன் என்ற நிறுவனத்தை சவூதி அரேபியா கடந்த மாதம் “பயங்கரவாத” பட்டியலில் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் நவ நாஜி குழு ஒன்றையும் அவுஸ்திரேலிய பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது. இந்தக் குழு உறுப்பினர்களின் குற்றச்செயல்கள் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“வன்முறைகள் தொடர்பில் அரசு பொறுமை காக்காது. அப்பாவி மக்களை கொல் வதை மதம் அல்லது சிந்தனை அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது” என்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரன் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.