கொழும்பு கிழக்கு துறைமுக முனையம்: அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை சீனாவுக்கு அனுமதி

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் முழுமையாக இயக்கப்படும் முனையமான கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்டத்தின் சிவில் வேலைகளுக்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதடன், 03 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.   இவ்விலைமுறிகள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய இந்த ஒப்பந்தம் அக்ஷன் இன்ஜினியரிங் கம்பனி மற்றும் சைனா ஹாபர் இன்ஜினியரிங் கம்பனி லிமிட்டட் கூட்டு வணிகத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.