அஜித்துக்கு தொல்லை கொடுக்கும் விஜய் சேதுபதி?

ஹெச்  வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து தான்  அவர் அஜித்துக்கு தொல்லை கொடுப்பாரோ என்கிறார்கள் ரசிகர்கள். ஹெச்.  வினோத் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்  வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதியை சந்தித்து வினோத் கதை சொன்னாராம்.  அந்த கதை பிடித்துப்போக, இந்த படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று  வினோத்திடம் கூறினாராம் விஜய் சேதுபதி.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி முடித்திருக்கிறார் வினோத். வலிமை படம் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

வலிமையை அடுத்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் தான் நடிக்கிறார் அஜித். அப்படி என்றால் அஜித் படத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்கிறாரோ, ஒரு வேளை அவர் தான் வில்லனோ என்றெல்லாம் ரசிகர்கள் யூகிக்கத் துவங்கிவிட்டனர்.

அதே  சமயம் தல 61 படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக  கூறப்படுகிறது. அதனால் விஜய் சேதுபதிக்கு தல வில்லனாக இருப்பாரோ என்றும்  பேச்சு கிளம்பியிருக்கிறது. வினோத் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை இந்த யூகங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் போன்று.