குறிஞ்சாக்கேணி அனர்த்தம்; படகுப்பாதை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது

குறிஞ்சாக்கேணி அனர்த்தம்; படகுப்பாதை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது-Kuringankerni Kinniya Disaster-3 Suspects Arrested Including Owner of the Ferry-Punt
கிண்ணியா அனர்த்தத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க. பாடசாலை மாணவர்கள், இன்றையதினம் பாடசாலையில் வைதத்து சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினர். (படம்: யாழ்.விசேட நிருபர்)

பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் பலியான கிண்ணியா படகுப்பாதை அனர்த்தம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை செலுத்திய இருவர் ஆகிய 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று (23) இடம்பெற்ற இவ்வனர்த்தத்தில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த படகுப்பாதையில் 21 பேர் பயணித்த நிலையில் இவ்வனர்த்தத்தின்போது மீட்கப்பட்டு கிண்ணியா தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் இன்று (24) மதியம் சிகிச்சையை நிறைவு செய்து வீடு திரும்பியதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஜிப்ரி தெரிவித்திருந்தார்.