நியமனம் பெற்ற பட்டதாரிகள் ரூ. 41,000 சம்பளத்துடன் நிரந்தரமாக்கப்படுவர்

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கி, ரூ. 41,000 சம்பளம் வழங்கப்படும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்றையதினம் (24) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட 3ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.