படகு விபத்து முழு நாட்டையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது

நாமல் டுவிட்டரில் கவலை தெரிவிப்பு

கிண்ணியாவில் நேற்றுக் காலை இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

கிண்ணியாவில் நேற்று காலை படகு மூழ்கி விபத்திற்குள்ளானதில் மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்தனர். இந் நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் தளத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அனுதாபம் தெரிவித்து பதிவொன்றை இட்டுள்ளார்.

கிண்ணியா படகு  விபத்து குறித்து அறிந்து நான் மிகவும் வேதனையுற்றேன் எனவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.