10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் 10கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூன்று பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். 

அம்பாறை வரிப்பத்தான்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த மைதான பகுதியில் இச்சட்டவிரோத செயற்பாடு இடம்பெறவுள்ளதாக கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை (21) மாலை கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட கஜ முத்துக்களை 10மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர்கள் முயன்றுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். 

மேலும் இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரி டி.சி வேவிட விதான வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படையின் தலைமையதிகாரி மெரில் டயஸ் தலைமையிலான அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு 45 ,50வயது மதிக்கத்தக்க மல்வத்தை பகுதியை சேர்ந்த இரு சந்தேக நபர்கள் உட்பட வரிப்பத்தான்சேனையை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் சந்தேக நபர்கள் மூவரையும் மற்றும் சான்று பொருட்கள் யாவும் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இறக்காமம் பொலிஸார் அம்பாறை நீதிமன்றில் சந்ததேக நபர்களை ஆஜர் படுத்தினர்.