1st Test; SLvWI: இலங்கை முதல் இன்னிங்ஸில் 386

1st Test; SLvWI: இலங்கை முதல் இன்னிங்ஸில் 386-1st Test-SLvWI-SL 386 In 1st Innings

- திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்கள்
- ரொஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகள்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 386 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்று (21) காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமான இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்திருந்தது.

அந்த வகையில், இன்றைய இரண்டாவது இலங்கை அணி ஆரம்பித்தது.

அதற்கமைய, 132 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்த திமுத் கருணாரத்ன இன்று 147 ஓட்டங்கைள பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவருடன் ஆட்டமிழக்காதிருந்த தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்று ஆட்டமிழந்தார்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் மிகப் பலமான நிலையிலிருந்த இலங்கை அணி, இன்று 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. இலங்கை அணியின் நடு வரிசை வீரர்களில் விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமாலை (45) தவிர ஏனையோர், குறைவான ஓட்டங்களையே பெற்று ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், றொஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

SRI LANKA 1ST INNINGS
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  c Cornwall b Gabriel 56 140 206 7 0 40.00
Dimuth Karunaratne (c) st †Da Silva b Chase 147 300 433 15 0 49.00
Oshada Fernando  c Bonner b Chase 3 27 39 0 0 11.11
Angelo Mathews  c Holder b Chase 3 25 32 0 0 12.00
Dhananjaya de Silva  hit wicket b Gabriel 61 95 129 5 0 64.21
Dinesh Chandimal  c Cornwall b Chase 45 83 136 5 0 54.21
Ramesh Mendis  c †Da Silva b Warrican 13 49 43 2 0 26.53
Suranga Lakmal  lbw b Warrican 11 44 48 2 0 25.00
Dushmantha Chameera  c Brathwaite b Warrican 3 12 16 0 0 25.00
Lasith Embuldeniya  c Blackwood b Chase 17 18 30 1 1 94.44
Praveen Jayawickrama  not out 8 18 26 1 0 44.44
Extras (b 5, lb 6, nb 8) 19  
TOTAL (133.5 Ov, RR: 2.88) 386  
Fall of wickets: 1-139 (Pathum Nissanka, 49.1 ov), 2-164 (Oshada Fernando, 57.3 ov), 3-170 (Angelo Mathews, 65.1 ov), 4-281 (Dhananjaya de Silva, 94.4 ov), 5-296 (Dimuth Karunaratne, 99.5 ov), 6-331 (Ramesh Mendis, 112.6 ov), 7-355 (Suranga Lakmal, 124.4 ov), 8-361 (Dinesh Chandimal, 127.4 ov), 9-361 (Dushmantha Chameera, 128.1 ov), 10-386 (Lasith Embuldeniya, 133.5 ov)
BOWLING O M R W ECON WD NB
Shannon Gabriel 19 2 69 2 3.63 0 5
Jason Holder 19 9 24 0 1.26 0 0
Rahkeem Cornwall 27 3 91 0 3.37 0 0
Kyle Mayers 3 0 9 0 3.00 0 0
Jomel Warrican 32 5 87 3 2.71 0 3
Roston Chase 28.5 3 83 5 2.87 0 0
Jermaine Blackwood 1 0 6 0 6.00 0 0
Kraigg Brathwaite 4 0 6 0 1.50 0 0