மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த சாணக்கியன் உள்ளிட்டவர்களுக்கும் தடை

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மட்டக்களப்பில் ஏழு பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஷ், முன்னாள் போராளிகள் நடராசா, சுரேஸ், தம்பித்துரை, கஜேந்திரன், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் சீ.புஷ்பலிங்கம் ஆகியோருக்கே இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக குறித்த நபர்கள் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்