DPMC இடமிருந்து ஓரியன் முச்சக்கர வண்டி டயர்கள்

DPMC-Orion

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு நன்செய்தியை வழங்கும் வகையில் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் அண்மையில் இலங்கைக்கு ஓரியன் முச்சக்கர வண்டி டயர்களை அறிமுகப்படுத்தியது.

தற்பொழுது நிலவும் சந்தை நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த மற்றும் ஏற்றுமதித் தரத்திலான முச்சக்கர வண்டி டயர்கள் அனைவரினாலும் பெற்றுக்கொள்ளக்கூடிய விலையில் சந்தைக்கு வெளியிடப்படுவது ஓரியன் டயரின் வருகையுடன் இடம்பெறுகிறது.

ஓரியன் டயர்கள் இலங்கையின் வீதிகளுக்குப் பொருந்தும் வகையில் அமைந்திருப்பதுடன், இதன் மூலம் முச்சக்கரவண்டிகளை இலகுவில் கையாள முடிகிறது. அத்துடன், வீதியுடன் நெருக்கமான உராய்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருப்பதுடன், பிரேக் கட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வினைத்திறன் மிக்கதாக இந்த டயர் அமைந்துள்ளது. ஒரியன் டயரின் உயரம் மற்றும் அகலம், ஏற்கனவே உள்ள அளவுகோல்களுக்கு ஏற்ப, முச்சக்கர வண்டிக்கு பெருமைக்குரிய தோற்றத்தை அளிக்கிறது என்பது இரகசியமல்ல.

ஓரியன் டயர்களை இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் (உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள்) உதித் விஜேதுங்க குறிப்பிடுகையில், ஏற்றுமதித் தரத்திலான டயரை அனைவரினாலும் தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

'பரிந்துரைக்கப்பட்ட டயர்களை உங்களது முச்சக்கர வண்டிகளுக்குப் பயன்படுத்துவதில் தயங்கத் தேவையில்லையென இலங்கையின் முச்சக்கர வண்டி நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான எமது நிறுவனம் பரிந்துரைக்கிறது. குறிப்பாக முச்சக்கர வண்டியில் டயர்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முச்சக்கரவண்டிக்கு ஒரியன் டயர்களைப் பயன்படுத்துவது பற்றி இருமுறை யோசிக்க வேண்டிய அவசியமில்லை, இது பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது மற்றும் முச்சக்கரவண்டியின் அதிகபட்ச செயல்திறனை வழங்குகிறது' என விஜேதுங்க கூறினார்.