மேற்கிந்திய அணி தொடரை அடுத்து டிசம்பரில் விடைபெறுகிறார் மிக்கி ஆத்தர்

மேற்கிந்திய அணி தொடரை அடுத்து டிசம்பரில் விடைபெறுகிறார் மிக்கி ஆத்தர்-Mickey Arthur to Resign as Sri Lanka’s Head Coach

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்கில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

 

 

இந்நாட்டிற்கு, தான் பயிற்சியாளராக கடமையாற்றிய ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிப்பதாக தெரிவித்துள்ள அவர், இலங்கை அணி வீரர்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற போது இருந்த இலங்கை அணியை விட தற்போது சிறந்த அணியொன்று உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2020 பெப்ரவரி மாதம் முதல் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆத்தர் செயற்பட்டு வருகின்றார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரொன்று இடம்பெற திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மிக்கி ஆத்தர் இங்கிலாந்தின் டெர்பிசெயார் (Derbyshire CCC) உள்ளூர் அணியின் பயிற்சியாளராக தனது பணியைத் தொடரவுள்ளார்.

இது தொடர்பில் Derbyshire CCC அணி வெளியிட்டுள்ள ட்விற்றர் பதிவு