சர்வதேச சட்ட ஆணைக்குழுவுக்கு இந்தியாவின் பிமல் படேல் தேர்வு

சர்வதேச சட்ட ஆணைக்குழுவுக்கு இந்திய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினரும் ராஷ்ட்ரி ரக்ஷா பல்கலைக்கழக துணைவேந்தருமான பேராசிரியர் பிமல் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளில் கடும் போட்டி நிலவிய வாக்கெடுப்பிலேயே ஐந்து ஆண்டு தவணைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது தவணைக் காலம் 2023 ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

192 உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஐ.நா பொதுச் சபை வாக்கெடுப்பில் படேல் 163 வாக்குகளை பெற்றதோடு இந்தியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் வேட்பாளர்கள் உட்பட ஆசிய-பசிபிக் குழுவுக்கான வாக்கெடுப்பில் அவர் முன்னிலை பெற்றார். ஆசிய பிசிபிக் குழுவில் 8 இடங்களுக்காக 11 வலுவான வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு அடுத்து தாய்லாந்து 162 வாக்குகளையும், ஜப்பான் 154 வாக்குகளையும் வியட்நாம் 145 வாக்குகளையும் வென்றன.

சர்வதேச சட்ட ஆணைக்குழு 1947 இல் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.