T20WC2021; AUSvNZ: புதிய சம்பியனானது அவுஸ்திரேலியா!

T20WC2021; AUSvNZ: புதிய சம்பியனானது அவுஸ்திரேலியா!-T20WC2021-Final-AUSvNZ-AUS Champion

ஐசிசி உலகக் கிண்ண ரி20 தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அவுஸ்திரேலியா, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து அணியில் காயம் அடைந்த கான்வேக்கு பதிலாக டிம் செய்பெர்ட் இடம் பெற்றார். மார்டின் கப்டில், டெரில் மிட்செல் இருவரும் நியூசிலாந்து இன்னிங்சை தொடங்கினர்.

மிட்செல் 11 ஓட்டங்கள் எடுத்து ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட் கீப்பர் வேடு வசம் பிடிபட்டார். அடுத்து கப்திலுடன் தலைவர் கேன் வில்லியம்சன் இணைந்தார்.

பொறுப்புடன் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 48 ஓட்டங்கள் சேர்த்தது. வில்லியம்சன் 21 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில் கொடுத்த பிடியெடுப்பு வாய்ப்பை ஹேசல்வுட் நழுவவிட்டார். இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட வில்லியம்சன் ஹட்ரிக் பவுண்டரி விளாசினார். கப்தில் 28 ஓட்டங்கள் எடுத்து (35 பந்து, 3 பவுண்டரி) ஸம்பா சுழலில் ஸ்டாய்னிஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, வில்லியம்சனுடன் கிளென் பிலிப்ஸ் இணைந்தார். அதிரடியாக விளையாடிய வில்லியமன் 32 பந்தில் அரை சதம் அடித்தார். கேன் - பிலிப்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 68 ஓட்டங்கள் சேர்த்தது. ஸ்டார்க் வீசிய 16வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்த வில்லியம்சன் 22 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.

பிலிப்ஸ் 18 ஓட்டங்கள், வில்லியம்சன் 85 ஓட்டங்கள் (48 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஹேசல்வுட் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அதிகபட்ச ஓட்டமாக மேற்கிந்திய தீவுகளின் சாமுவேல்ஸ் படைத்த சாதனையை (85*) வில்லியம்சன் நேற்று சமன் செய்தார்.

நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் குவித்தது.

நீஷம் 13 ஓட்டங்கள், செய்பெர்ட் 8 ஓட்டங்கள்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 4 ஓவரில் 16 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஸ்டார்க் 4 ஓவரில் 60 ஓட்டங்கள்களை வாரி வழங்கி ஏமாற்றமளித்தார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 173 ஓட்டங்கள் எடுத்தால் முதல் முறையாக ரி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றலாம் என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது.

தலைவர் பிஞ்ச் பிஞ்ச் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து போல்டின் பந்துவீச்சில் மிட்செல் வசம் பிடியெடுக்கப்பட்டார். அடுத்து வோனருடன் மிட்செல் மார்ஷ் இணைந்தார். இவர்களின் அதிரடியால் ஓட்டங்கள் வேகமாக உயர்ந்தது.

வோனர் 53 ஓட்டங்கள் (38 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அவுஸ்திரேலியா18.5 ஓவரில்2 விக்கெட் இழப்புக்கு173  ஓட்டங்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது.

அந்த வகையில் முதல் முறையாக ரி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

மிட்ஷெல் மார்ஷ் 77 ஓட்டங்கள் (50 பந்து, 6  பவுண்டரி, 4 சிக்சர்), கிளென் மேக்ஸ்வெல் 28 ஓட்டங்கள் (18 பந்து, 4 பவுண்டரி,1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட் 2  விக்கெட் எடுத்தார்.

ஆட்ட நாயகனாக மிச்சல் மார்ஷ் தெரிவானார்.

தொடரின் நாயகனாக டேவிட் வோனர் தெரிவானார்.

இத்தொடரில்

  • அதிக ஓட்டங்களை (303) குவித்த வீரராக பாபர் அசாம் தனது பெயரை பதிவு செய்தார்
  • வணிந்து ஹசரங்க அதிக விக்கெட்டுகளை (16) கைப்பற்றிய வீரராக தனது பெயரை பதிவு செய்து கொண்டார்.
  • போட்டியொன்றில் அதிக ஓட்டங்களை கைப்பற்றிய வீரராக ஜோஸ் பட்லர் (101*) தனது பெயரை பதிவு செய்து கொண்டார்.
  • போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை (210/2) பெற்ற அணியாக இந்தியா தனது பெயரை பதிவு செய்தது.
  • ஒரு போட்டியில் இரு அணிகளும் பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கை 368 ஆக (இங்கிலாந்து - தென்னாபிரிக்கா) பதிவாகியுள்ளது.
  • மொத்த 6 ஓட்டங்கள்: 405
  • மொத்த விக்கெட்டுகள்: 526

 

NEW ZEALAND INNINGS (20 OVERS MAXIMUM)
BATTING   R B M 4s 6s SR
Martin Guptill  c Stoinis b Zampa 28 35 53 3 0 80.00
Daryl Mitchell  c †Wade b Hazlewood 11 8 18 0 1 137.50
Kane Williamson (c) c Smith b Hazlewood 85 48 69 10 3 177.08
Glenn Phillips  c Maxwell b Hazlewood 18 17 32 1 1 105.88
James Neesham  not out 13 7 17 0 1 185.71
Tim Seifert  not out 8 6 15 1 0 133.33
Extras (b 1, lb 3, nb 1, w 4) 9  
TOTAL (20 Ov, RR: 8.60) 172/4  
Fall of wickets: 1-28 (Daryl Mitchell, 3.5 ov), 2-76 (Martin Guptill, 11.1 ov), 3-144 (Glenn Phillips, 17.2 ov), 4-148 (Kane Williamson, 17.5 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Mitchell Starc 4 0 60 0 15.00 5 9 1 1 1
Josh Hazlewood 4 0 16 3 4.00 18 3 0 0 0
Glenn Maxwell 3 0 28 0 9.33 5 0 3 0 0
Pat Cummins 4 0 27 0 6.75 7 0 1 2 0
Adam Zampa 4 0 26 1 6.50 7 1 1 0 0
Mitchell Marsh 1 0 11 0 11.00 1 2 0 0 0
 
 
AUSTRALIA INNINGS (TARGET: 173 RUNS FROM 20 OVERS)
BATTING   R B M 4s 6s SR
David Warner   b Boult 53 38 57 4 3 139.47
Aaron Finch (c) c Mitchell b Boult 5 7 12 1 0 71.42
Mitchell Marsh  not out 77 50 80 6 4 154.00
Glenn Maxwell  not out 28 18 33 4 1 155.55
Extras (lb 4, w 6) 10  
TOTAL (18.5 Ov, RR: 9.18) 173/2  
Fall of wickets: 1-15 (Aaron Finch, 2.3 ov), 2-107 (David Warner, 12.2 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Trent Boult 4 0 18 2 4.50 14 2 0 1 0
Tim Southee 3.5 0 43 0 11.21 6 5 2 1 0
Adam Milne 4 0 30 0 7.50 12 4 1 1 0
Ish Sodhi 3 0 40 0 13.33 3 3 2 3 0
Mitchell Santner 3 0 23 0 7.66 4 1 1 0 0
James Neesham 1 0 15 0 15.00 1 0 2 0 0