வரவு செலவு திட்டம் 2022- Live (முழு உரை)

வரவு செலவுத் திட்ட முழு உரை 

__________________________________________________________________________________________________________________________

3.04pm அரச, தோட்ட, தனியார் காணிகள் பயன்பாடு தொடர்பிலும், உச்சபட்ச பயன்பாட்டை நோக்காக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் யோசனை

3.03pm விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத நிலங்களை இளைஞர், யுவதிகளுக்கு வழங்கி புதிய விவசாய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி உயர் தொழில்நுடப்பத்துடனான Agro Park (விவசாய பூங்கா) ஏற்படுத்துவதற்கு யோசனை

2.59pm இறப்பர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்து, இறப்பரை மூலப்பொருளாக ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, இறப்பர் மூலமான உற்பத்திகளுக்கான மூலதனத்தை ஊக்குவிக்க யோசனை

2.54pm கற்ற இளைஞர்கள் தொழிலைத் தேடும் மனப்பாங்கிலிருந்து விடுவித்து, அவர்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கும் வகையில், தொழில் தொடக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான வர்த்தக பதிவுக் கட்டணத்தை அறவிடாதிருக்கு யோசனை முன்மொழிவு

2.53pm குறிப்பிடும் அளவிலான விசேட தேவையுடையவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சமூகத்தில் சமமான பொறுப்பு, சமமான  சலுகைகள் வழங்கப்படும் வகையில் அவர்களின் உரிமைகளுக்கான சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த யோசனை

2.53pm ஓய்வூதியம் பெறாத சிரேஷ்ட பிரஜைகளுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த யோசனை
"அரசாங்கம் எனும் வகையில் அதனை ஆரம்பிக்க ஆரம்ப நிதியாக வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 100 மில்லியன் அடிப்படை நிதியை வழங்க எதிர்பார்க்கிறோம்"

2.52pm முச்சக்கர வண்டி அபிவிருத்தி, அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க, 'முச்சக்கர வண்டி ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையொன்றை அமைக்க யோசனை
"முச்சக்கர வண்டிகள் 7 இலட்சம் வரை உள்ளன. அவர்களது  நிர்வாகம் தொடர்பான எவ்வித அதிகாரசபையும் இல்லாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"

2.51pm வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளை வழங்குவது இதன் பின்னர் எதிர்காலத்தில் திறந்த ஏலத்தில் மாத்திரம் வழங்க யோசனை
"இது பொதுச் சொத்து என நாம் கருதுகிறோம் எனவே எமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்காது ஏலத்தில் வழங்க முடிவு செய்துள்ளோம்"

2.50pm 5G தொழில்நுட்பத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் இணைக்க யோசனை; அதனை வழங்கும் சேவை நிறுவனங்களை தெரிவு செய்வது TRC யினால் திறந்த ஏலத்தில் மேற்கொள்ள யோசனை

2.47pm இலங்கையில் காப்புறுதி கூட்டுதாபனத்தின் வணிக ரீதியான அணுகுமுறையை போட்டி நிலைமைக்கு அதனை எடுத்துச் சென்று, சகலருக்கும் காப்புறுதி கிடைக்கக் கூடிய வகையில் மாற்ற யோசனை

2.45pm சமுர்த்தி வங்கி முறையை அனைத்து சேவைகளையும் உள்ளடக்கிய 'One Stop Shop' நிறுவனமாக மாற்ற யோசனை  

2.44pm நடைமுறை சமுர்த்தி செயற்பாடுகளை நவீன மயப்படுத்தவும், கிராமிய அபிவிருத்தி இயக்கமாக அதனை மாற்ற எதிர்பார்ப்பு

2.43pm அரச சேவையாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்க யோசனை
"இதனால் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதில் தடை ஏற்படாது, அதற்கு சமமான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்"

2.40pm பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெற வேண்டுமாயின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 10 வருடங்களாக அப்பதவியில் இருக்க வேண்டுமென யோசனை

2.39pm சூரிய சக்தியை ஊக்குவிக்கும் வகையில், மின்சார மானியத்தை 10% இனால் குறைக்கவும் யோசனை
"இது உங்களுக்கு சிறிய அளவாக தென்பட்டாலும் இது ஒன்று சேர்க்கப்படும்போது பாரிய நிதியாகும் என நாம் கணக்கிட்டுள்ளோம்"

2.39pm அரச நிறுவனங்களின் தொலைபேசி செலவீனங்கள் 25% ஆல் குறைக்க யோசனை

2.38pm அமைச்சர்கள், அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் மானியம் 5 லீற்றரால் குறைக்க யோசனை

2.37pm தற்போது நிர்மாணிக்கப்படும் கட்டடங்கள் தவிர்ந்த புதிய அரச அலுவலகங்களின் நிர்மாணப் பணிகளை 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்க யோசனை

2.07pm 2022 வரவு செலவு திட்டம் ஜனாதிபதியின் சௌபாக்கிய நோக்கினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது

2.05pm இவ்வரவு செலவு திட்டம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் 2ஆவது வரவு செலவுத் திட்டம்; நிதியமைச்சராக எனது முதலாவது வரவு செலவுத் திட்டம்.

2.04pm ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற சபைக்கு வருகை தந்துள்ளார். 

2.04pm 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவினால் ஆரம்பம்

1.50pm நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் வருகை

PDF File: