Meta: Facebook நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்

Meta: Facebook நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்-Meta-Metaverse

அனைவரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய கனெக்ட் நிகழ்வில் Facebook Inc என்ற பெயருக்கு மாற்றாக புதிய பெயரை அறிவித்திருக்கிறார் மார்க் சக்கர்பெர்க்.

மெட்டாவெர்ஸை (Metaverse) கட்டமைப்பதில் மார்க் அன் கோ தீவிரமாக இறங்கியிருப்பதை Facebookகின் செயல்பாடுகளின் மூலமே தெரிந்து கொள்ள முடிந்தது. தற்போது இந்தப் பெயர் மாற்றம் அதனை இன்னும் வலுவாக்கியிருக்கிறது. இந்தப் பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து அவர் பேசும் போதும், "தற்போது ஈடுபட்டிருக்கும் செயல்பாடுகளையோ திட்டங்களையோ பிரதிபலிப்பதாக Facebook என்ற பெயர் இல்லை, அது சமூக வலைதளத்தை குறிப்பதாக மட்டுமே இருந்து வந்தது.

Meta: Facebook நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்-Meta-Metaverse

ஆனால், இனி வரும்5 காலங்களில் அப்படி இருக்காது, Facebook என்ற ஒரு சமூக வலைத்தள நிறுவனமாக இல்லாமல் Meta என்ற Metaverseஸை மையப்படுத்தி இயங்கும் ஒரு நிறுவனமாக அறியப்படும்" என அவர் பேசியிருக்கிறார்.

WhatsApp, Instagram, Facebook, Oculus ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய Facebook இன் தாய் நிறுவனம் இனி Meta (Meta) என அழைக்கப்படும். Facebook சமூக வலைத்தள சேவை அதே பெயருடனே தொடரும்.

Meta: Facebook நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்-Meta-Metaverse

இணையத்தின் அடுத்த கட்டமாக இந்த Metaverse இருக்கும், அந்த அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இருக்க வேண்டும் எனத் தீவிரமாக இருக்கிறார் மார்க். அதன் வெளிப்பாடாகவே இந்தப் புதிய பெயர் பார்க்கப்படுகிறது.

`Meta' ஆகும் Facebook... மார்க்கின் கனவுத் திட்டமான `Metaverse' பற்றித் தெரியுமா?

முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹவ்கென் (Frances Haugen) அடுக்கடுக்கான புகார்களைக் கூறியது, Facebook இன்ஸ்டாகிராம் திடீரென சில மணிநேரம் முடங்கியது எனத் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக லைம்லைட்டிலேயே இருந்து வருகிறது Facebook நிறுவனம். இதோடு Facebook, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஆக்குலஸ் என அனைத்தும் அடங்கிய தாய் நிறுவனமான Facebook இன்கார்ப்பரேட்டட்டின் பெயரை மாற்றப்போவதாகவும் செய்திகள் கடந்த வாரம் வெளியாகின. நேற்று வருடாந்திர Facebook கனெக்ட் நிகழ்வில் புதிய பெயரை அறிவித்தார் மார்க் சக்கர்பெர்க். அந்தப் பெயர் 'Meta'.

Meta: Facebook நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்-Meta-Metaverse

Facebook இன் குடையின் கீழ் பல நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. இன்னும் பல நிறுவனங்கள் அதன் கீழ் வரவிருக்கின்றன. அப்படி இருக்கும்போது அது Facebookகாக, சமூக வலைதள நிறுவனமாக மட்டுமே அறியப்படுவது சரியல்ல என்று இந்தப் புதிய பெயரை வைத்துள்ளார் மார்க். சமூக வலைதள விஷயங்களில் ஏற்படும் சர்ச்சைகள் மொத்த நிறுவனத்தையும் பாதிக்கக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார் மார்க்.

இந்த 'Meta' என்னும் பெயர் அவரது கனவுத்திட்டமான Metaவெர்ஸிலிருந்து (Metaverse) வந்தது. கடந்த சில வருடங்களாகவே 'Metaverse' உருவாகும் முயற்சியில் Facebook அதீத ஈடுபாடு காட்டி வருகிறது. Facebook மட்டுமின்றி ஃபோர்ட்நைட் (Fortnite), ரோபோலக்ஸ் (Robolux) என அமெரிக்க நிறுவனங்கள் பலவும் Metaverse உருவாக்குவதில் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுகின்றன.

'இணையத்தின் அடுத்த பரிமாணம் இந்த Metaverseதான்' எனத் தொடர்ந்து கூறி வருகின்றன இந்த நிறுவனங்கள். சரி, முதலில் Metaverse என்றால் என்ன?

'Metaverse', ஒரு விர்ச்சுவல் உலகம்:

Meta: Facebook நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்-Meta-Metaverse
நிஜ உலகைப் போலவே விர்ச்சுவலாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு உலகம்தான் Metaverse. Metaverse என்ற வார்த்தையை முதன் முதலில் நீல் ஸ்டெபன்ஸன் (Neal Stephenson) என்ற எழுத்தாளர் 'ஸ்நோ க்ராஷ்' என்ற தனது புத்தகத்தில் பயன்படுத்தியிருப்பார். 'Metaverse' என்றால் என்ன என்பதற்கு உதாரணமாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'ரெடி ப்ளேயர் ஒன்' படத்தில் வரும் OASIS-ஐ கூறலாம். இந்தப்படம் 2045-ல் நடப்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நிஜ உலகில் இருக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபட OASIS என்ற விர்சுவல் உலகத்தில் வாழ எத்தனிப்பார்கள் மக்கள். அதற்குப் படத்தில் வேறுசில காரணங்கள் கூறப்பட்டிருக்கும். அது Metaவெர்ஸுக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸை (VR Glass) அணிந்து கொண்டு நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாத செயல்களை எல்லாம் விர்ச்சுவல் உலகில் செய்யலாம். இதுதான் இதுவரை Metaவெர்ஸூக்கு இந்த உலகம் அளித்திருக்கக்கூடிய பொருள்.

கொரோனா சூழல் காரணமாக இணையத்தின் மூலமே அனைத்தையும் செய்யப் பழகிக் கொண்டிருக்கிறோம் நாம். இணையத்தின் மூலம் எல்லாவற்றையும் செய்ய முடிவதனால், இணையத்திலேயே ஓர் உலகையும் உருவாக்கிவிடலாமே என்று யோசிக்கின்றன இந்த டெக் நிறுவனங்கள். நிஜ உலகிற்கு இணையான இந்த விர்ச்சுவல் உலகமானது எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும், நீங்கள் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி. அமேசானில் ஒரு ட்ரஸ் வாங்கலாம் என்று நினைக்கிறீர்கள், ஆனால் ட்ரஸ்ஸை மட்டும் பார்த்து வாங்கவேண்டும் என்று இல்லாமல், VR Glass-ஐ மாட்டிக் கொண்டு Metaவெர்ஸில் இருக்கும் அதன் கடைக்கு விர்ச்சுவலாக சென்று ஒரு ட்ரஸ்ஸை ட்ரையல் செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? அதுதான் Metaverse கனவு.

இந்தக் கொரோனா காலத்தில் பல நிறுவனங்களும் விர்சுவல் டூர்களை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்தார்கள். கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் மக்களால் வெளியே எங்கேயும் அவ்வளவு சுலபமாகச் சென்று வர முடியவில்லை. அப்போதுதான் சில நிறுவனங்கள் இந்த வசதியை அறிமுகப்படுத்தினார்கள். நமது மொபைல் போன் அல்லது கணினியின் மூலமே யமஹா நிறுவனம் விர்சுவலாக வடிவமைத்திருக்கும் யமஹா ஷோரூம்களில் அவர்களுடைய புதிய வெளியீடுகளை நம்மால் பார்க்க முடியும்.

ஒரு கடைக்குள் சென்று கடையைச் சுற்றிப் பார்ப்போம், அங்குள்ள டிவியில் விளம்பரங்கள் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கும், பைக் வாங்கச் செல்கிறோம் என்றால் அந்த பைக்கை சுற்றிப் பார்ப்போம். இப்படி நாம் ஒரு கடைக்குச் சென்று வரும் அனுபவத்தை விர்ச்சுவலாகவே வழங்க விரும்பின அந்த நிறுவனங்கள். இப்படி ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய கடைகள், சேவைகள் அனைத்துக்கும் விர்ச்சுவல் வடிவத்தைக் கொடுத்து, அந்த விர்ச்சுவல் வடிவங்களுக்கான தளத்தை Facebook போன்ற நிறுவனங்கள் வழங்கினால், அது தான் Metaverse. (இப்போதைக்கு Metaverse இப்படித்தான் இருக்கும் என வைத்துக் கொள்ளலாம்).

Meta: Facebook நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்-Meta-Metaverse

Metaverse என்பது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தால் அல்லது தனிநபரால் சாத்தியப்படும் விஷயம் அல்ல. பல பேருடைய கூட்டு முயற்சியால் உருவாகவிருப்பது அது. இதனைச் சாத்தியப்படுத்தும் நோக்கத்தில்தான் பல நிறுவனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் ஒரு நிறுவனம் Facebook. இந்த Metaverse திட்டத்தில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து ஆயிரக்கணக்கானோரைப் புதிதாக Metaவெர்ஸுக்காக மட்டுமே பணியமர்த்தியிருக்கிறது Facebook. Metaவெர்ஸுக்கான சாப்ட்வேர், ஹார்டுவேர் என 360 டிகிரியில் பரபரவென ஓடிக்கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.

மெட்டாவெர்ஸூக்கான ரேஸில் ஃபோர்ட்நைட் நிறுவனமும் முக்கிய போட்டியாளராக இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபல அமெரிக்கப் பாடகியான அரியானா கிராண்டே ஃபோர்ட்நைட் தளத்தில் விர்ச்சுவல் கான்சர்ட் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதனைப் பல லட்சம் பார்வையாளர்கள் விர்ச்சுவலாக பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

இத்தாலியைச் சேர்ந்த பேஷன் நிறுவனமான கூச்சி (Gucci) 'கூச்சி விர்ச்சுவல் 25' என்ற பெயரில் 25 விர்ச்சுவல் காலணிகளை விற்பனை செய்திருக்கிறது. 9 அமெரிக்க டாலர்கள் மற்றும் 12 அமெரிக்க டாலர்களுக்கு இந்த விர்ச்சுவல் காலணிகளை வாடிக்கையாளர்கள் வாங்கியிருக்கிறார்கள். விர்சுவல் காலணிகளா எனக் கேட்கிறீர்களா? இந்தக் காலணிகளை Facebook அல்லது இன்ஸ்டாகிராமில் நாம் போடும் புகைப்படங்களுக்காப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். அதாவது, புகைப்படம் எடுக்கும்போது (கேமரா கண் கொண்டு பார்க்கும் போது) இந்தக் காலணிகளை நாம் அணிந்திருப்பது போலவே இருக்கும். அதுதான் விர்ச்சுவல் காலணிகளாம்.

Meta: Facebook நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்-Meta-Metaverse

மெட்டாவெர்ஸை உருவாக்க வேண்டும் என பல நிறுவனங்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமாக Metaverse விரிந்திருக்கும். அதில் யாருடைய கனவு நிஜத்தில் Metaverse ஆக மாறப்போகிறது என்பதைக் காண இன்னும் சில ஆண்டுகள் நாம் காத்திருந்தாக வேண்டும். காத்திருப்போம்!