வந்துரம்ப பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு OIC கைது

வந்துரம்ப பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு OIC கைது-Wanduramba Police Station-Crime Division OIC Arrested

நபர் ஒருவரை மிரட்டி 10 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் வந்துரம்ப பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மற்றுமொரு நபருடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் பேரில் வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக ஒரு மில்லியன் ரூபாவை முன்பணத்துடன் வந்துரம்ப பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, குறித்த பணத்தை அந்நபரை மிரட்டி குறித்த பொலிஸ் அதிகாரி பெற்றுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, விசேட பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, விசாரணைகளில் பணமோசடி சம்பவம் உறுதிப்படுத்தப்படதைத் தொடர்ந்து, சந்தேகநபரான வந்துரம்ப பொலிஸ் குற்றப்பிரிவின் OIC நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகொடை பொலிஸாரால் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.