Affiniti FinTech Solutions ஐ புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ள டேவிட் பீரிஸ் மற்றும் அவொனெட்

Affiniti FinTech Solutions ஐ பலப்படுத்தும் மற்றும் உலகளாவிய ரீதியிலான விஸ்தரிப்பை வேகப்படுத்தும் புதிய கூட்டு முற்சியொன்றை அங்குரார்ப்பணம் செய்திருப்பதாக டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் அவொனொட் டெக்னோலஜி என்பன அறிவித்துள்ளன. டெலிகுவன்சி மனேஜ்மன்ட், (Delinquency Management) மற்றும் வாடிக்கையாளர் உறவுகள் முகாமைத்துவ செயற்பாட்டினை டிஜிட்டல் முறையில் மாற்றுகின்ற Fintech தீர்வுகளின் தொகுப்பே Affiniti ஆகும். Affiniti; மூலம் BFSI, Telco, Utility மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேகரிப்பு மற்றும் மீட்பு என்பன தானியங்கல் முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் செயற்பாட்டு பணியாளர்களின் பெளதீக ரீதியிலான தலையீடு குறைந்திருப்பதுடன், டெலிகுவன்சி மனேஜ்மன்டை வினைத்திறனாக முன்னெடுக்க முடிகிறது.

Affiniti ஆனது, நிதி ரீதியான பாதிப்புக்கு உள்ளான வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமர் ஹார்ட்ஷிப் மனேஜ்மன்ட் (Customer Hardship Management) தொடர்பில் முற்கூட்டிய எச்சரிக்கை சமிக்ஞைகளை வழங்குவதுடன், தானியங்கி வழுக்கண்டுபிடிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை சேகரிப்பு உகப்பாக்கத்துடன் இது தூண்டுகிறது. அத்துடன், இயந்திரத்தினால் பலப்படுத்தப்பட்ட கணிப்புக்களை மேம்படுத்துவதுடன், மீட்புக் கட்டணத் திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை கண்காணிக்கத் தவறிய வாடிக்கையாளர்களுடன் உரையாடல்களை மேற்கொள்ளல் போன்ற தனித்துவமான விடயங்களையும் இது வழங்குகிறது. முன்னணி வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பாடல் நிறுவனங்களால் Affiniti தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் சம்பத் வங்கி பிஎல்சி, பி.ஏ.பி.சி வங்கி, எச்என்பி பினான்ஸ் பிஎல்சி, எச்.டி.எப்.சி வங்கி, சி.டி.பி, எல்.பி பினான்ஸ், வெலிபெல் பினான்ஸ் மற்றும் டயலொக் அச்ஸியாட்டா ஆகியன உள்ளடங்குகின்றன.

பரந்துபட்ட விடயப்பரப்புக்களைக் கொண்ட பாரிய பெரு நிறுவனங்களில் ஒன்றான டேவிட் பீரிஸ் குழுமம், நாட்டின் மிகப்பெரிய மோட்டார் வாகன நிறுவனமாக அறியப்பட்டுள்ளது.