வவுனியாவில் ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைப்பு

வவுனியாவில் ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைப்பு-Vavuniya Journalist Summoned for Investigation

வவுனியாவை சேர்ந்த சிரேஷட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அவருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் வறுமைக்குட்பட்ட மக்களுக்காக உதவும் சமூக ஆர்வலர் அமைப்பு ஒன்று தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக. தெரிவிக்கப்படுகின்றது.

ஓமந்தை விஷேட நிருபர்