விலையேற்றத்தை கண்டித்து வடிவேல் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Vadivel Suresh Protest Haputale

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடார்பாகவும், பெருந்தோட்ட கம்பெனிகளின் அடாவடி நிர்வாகத்திற்கு பதிலடி தரும் நோக்குடனும், உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் நேற்றைய தினம் (23) வடிவேல் சுரேஷ் தலைமையில் மாபெரும் புரட்சி போராட்டம் அப்புத்தளை நகரில் நடைபெற்றது.

இதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய தோட்டத் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான பதாதைகளை ஏந்தியவாறு கூச்சலிட்டபடி இப்போராட்டம் அப்புத்தளை நகரில் இன்றைய தினம் இடம்பெற்றது.

பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக போராட்டங்கள் இடம்பெற்றபோது பதுளை மண்ணில் முதன் முறையாக வடிவேல் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தின் விளைவாக கொழும்பு, பதுளை பிரதான வீதி இன்றைய தினம் அப்புத்தளை நகரத்தில் வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது இருந்தது குறிப்பிடத்தக்கது.