தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்களான ஸ்ரீதரன், சாணக்கியனை புலிகள் என சாடல்

தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்களான ஸ்ரீதரன், சாணக்கியனை புலிகள் என சாடல்

- சபையில் சுமந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

அமைச்சு ஆலோசனை குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களான ஸ்ரீதரன் மற்றும் சாணக்கியனை சில எம்.பிக்கள் புலிகள், பயங்கரவாதிகெளன்று சாடியுள்ளதாகவும் இது மிகவும் கவலைக்கிடமான விடயம் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கோப்குழு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

வனஜீவராசிகள் மற்றும் சுற்றாடல் தொடர்பான ஆலோசனை குழு கூட்டத்தில் வைத்து எமது கட்சியை சேர்ந்த எஸ். ஸ்ரீதரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை ஆளும் தரப்பு எம்.பிக்கள் சிலர் புலிகள், பயங்கரவாதிகளென்று தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சில விடயங்கள் பற்றி பேச முற்படுகையில் அதற்கு இடமளிக்காது இவ்வாறு கூறியிருப்பது நியாயமற்றது. இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இது மிகவும் கவலையான விடயம். சந்திம வீரக்கொடி மாத்திரமே அவ்வாறு நடக்காதீர்கள் என்று தடுத்துள்ளார் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்