இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள Huawei MateBook X Pro 2021

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, புதிதாக மேம்படுத்தப்பட்ட Huawei MateBook X Pro 2021 ஐ இலங்கையில் முழு அளவிலான மேம்பட்ட அம்சங்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த நேர்த்தியான தோற்றமுடைய, உன்னதமான மடிக்கணினி சிறந்த செயல்திறன், அனைத்து சூழ்நிலை நுண்ணறிவு மற்றும் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய MateBook X Proவின் முக்கிய பண்புகள் திகைப்பூட்டும் FullView display, பிரமிக்க வைக்கும் தோற்றம், ultra-portabilityமற்றும் நாள் முழுவதுமான பெட்டரி ஆயுள்.

இது 13.9 inches FullView display, 3K உயர் வரையறை படத் தரத்துடன் அதிவேகமாக பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது. 1.33 கிலோகிராம் மற்றும் 14.6 மி.மீ கனதி கொண்ட MateBook X Proஎன்பது ஒவ்வொரு தொழில் வல்லுனரும் தேடும் மடிக்கணினியாகும்.

செயல்திறனைப் பொறுத்தவரை, அதன் 11 ஆவது Gen Intel Core செயலி மற்றும் 16 GB LPDDR4x மெமரி ஆகியவை சிறந்த செயல்திறனை வழங்குகின்றன, இது தினசரி நோக்கங்களுக்காக, கேமிங் அல்லது வீடியோ எடிட்டிங் போன்ற தொழில்முறை பணிகளுக்காக இருக்கலாம்.

Huawei Free Touch –ஒவ்வொரு தொடுதலுடனும் மென்மையான பின்னூட்டங்களை வழங்கும் டச் பேட், சைகைகளுடன் கூடிய உயர் துல்லிய மல்டி-பாயிண்ட் டச் ஸ்கிரீன், dual edge microphones மற்றும் quad ஸ்பீக்கர்கள் போன்றன தொழில்நுட்ப ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும்.