ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு ஒக்டோபர் 25 முதல் பாடசாலை ஆரம்பம்

Islandwide Schools of Primary Grades Will be Reopen from October 25

- கத்தோலிக்க பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும் திறப்பு

இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி மீள திறக்கப்படுமென, கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அமைய, குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, உரி வழிகாட்டல்கள் அந்தந்த பாடசாலைகளின் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பின்பற்ற வேண்டுமென கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.