ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் கொவிட் மருந்து

உலக சுகாதார அமைப்பு வழிநடத்தும் திட்டம் ஒன்று, ஏழை நாடுகளுக்காக மிகக் குறைந்த விலையில் கொவிட்-19 மாத்திரைகளைப் பெறவுள்ளது.

ஏழை நாடுகளுக்குச் சமமான முறையில் தடுப்பூசிகள், பரிசோதனைகள், சிகிச்சை ஆகியவற்றை வழங்கவும் அந்தத் திட்டம் முற்படுகிறது.

குறைந்த அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஒவ்வொரு மாத்திரைக்கு 10 டொலர் ஆகும். ஏழை நாடுகளுக்குச் சுமார் 1 பில்லியன் வைரஸ் தொற்றுப் பரிசோதனைக் கருவிகளை விநியோகிக்கவும் திட்டம் இலக்கை வகுத்துள்ளது.

120 மில்லியன் நோயாளிகளுக்கு மருந்துகளை வாங்குவதும் அதில் அடங்கும். அடுத்த 12 மாதங்களில் ஏழை நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 மில்லியன் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.