பாலமுனை றைஸ்டார் பதவி உயர்வு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகரை கௌரவிப்பு

பாலமுனை றைஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று பாலமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்த பாலமுனை றைஸ்டார் விளையாட்டு கழகத்தின் அலோசகர் எம்.கே.எம்.இப்னு அசாரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த (10ம் திகதி) பாலமுனையில் இடம்பெற்றது.

றைஸ்டார் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம்.பாயிஸ் அசிரியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் ஆலோசகர்களான கே.எல்.உபைதுள்ளா அதிபர், கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.இப்றாஹிம், அக்கரைப்பற்று மாநகர சபையின் கணக்காளர் எம்.எப்.பர்ஹான், தொழிலதிபர் கே.எல்.எம்.ஜிப்ரி உட்பட கழகத்தின் உறுப்பினர்கள் , பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதிவி உயர்வு பெற்ற எம்.கே.எம்.இப்னு அசாரை பாராட்டி கழகத்தின் உறுப்பினர்கள் புடை சூழ வாழ்த்தி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)