மாகாணங்கள் இடையேயான பயணக் கட்டுப்பாடு ஒக்டோபர் 31 வரை நீடிப்பு

மாகாணங்கள் இடையேயான பயணக் கட்டுப்பாடு ஒக்டோபர் 31 வரை நீடிப்பு-Inter Provincial Travel Restrictions Extended Till 4am on October 31

மாகாணங்களுக்கு இடையே தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31, அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த சில தினங்களாக இலங்கையில் நீண்ட விடுமுறை கருதி நாளை (21) வரை பயணக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக பேண ஜனாதிபதி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற கொவிட்-19 செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.