க‌ட‌ன் சுமை கொண்ட‌ 10 உல‌க‌ நாடுக‌ளுக்குள் இல‌ங்கை இல்லை

க‌ட‌ன் சுமை கொண்ட‌ 10 உல‌க‌ நாடுக‌ளுக்குள் இல‌ங்கை இல்லை-United Congress Party

- ஐக்கிய‌ காங்கிர‌ஸ் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

க‌ட‌ன் சுமை கொண்ட‌ 10 உல‌க‌ நாடுக‌ளுக்குள் இல‌ங்கை இல்லை என்ப‌து எம‌து பொதுஜ‌ன‌ அர‌சின் வெற்றியாகும்.

இவ்வாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்ைகயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான், ப‌ங்க‌ளாதேஷ் போன்ற‌ நாடுக‌ள் உல‌க‌ க‌ட‌ன் சுமை உள்ள‌ 10 நாடுக‌ள் ப‌ட்டிய‌லில் உள்ள‌ன‌. ந‌ம‌து நாடு இந்த‌ நாடுக‌ளிட‌ம் க‌ட‌ன் வாங்கிய‌ போதும் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சியில் அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌டுகிற‌து.

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்‌ஷ ஜ‌னாதிப‌தியாக‌ இருந்த‌ ஆட்சியில் மிக‌ நீண்ட‌ கால‌ம் பொருளாதார‌ அமைச்ச‌ராக‌ பெசில் ராஜ‌பக்‌ஷ இருந்து நாட்டை பொருளாதார‌த்தில் க‌ட்டியெழுப்பினார். பின்ன‌ர் வ‌ந்த‌ பொல்லாட்சியில் ம‌த்திய‌ வ‌ங்கி கொள்ளைய‌டிப்பின் மூல‌ம் நாடு பாரிய‌ பொருளாதார‌ வீழ்ச்சியைக் க‌ண்ட‌து. அத்துட‌ன் அமைச்சர்க‌ள் ப‌ல‌ர் நாட்டின் ந‌ல‌ன்க‌ளை கொள்ளைய‌டித்து உல்லாச‌ம் அனுப‌வித்த‌தால் நாட்டின் பொருளாதார‌ம் வீழ்ந்த‌து.

த‌ற்போது இந்த‌ அர‌சு ஆட்சிக்கு வ‌ந்து இப்போதுதான் இர‌ண்டு வ‌ருட‌த்தை நெருங்குகிற‌து. கொரோனாவால் க‌டுமையாக‌ வீழ்ச்சி அடைந்தும் க‌ட‌ன் சுமை கொண்ட‌ 10 உல‌க‌ நாடுக‌ளில் ந‌ம‌து நாடு இல்லை என்ப‌து ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌பக்‌ஷ, நிதி அமைச்ச‌ர் பெசில் ராஜ‌பக்‌ஷ கொண்ட‌ எம‌து அர‌சுக்கு கிடைத்த‌ வெற்றியாகும்.