மாகாண எல்லையை மீறிய 329 வாகனங்கள்; 783 நபர்கள் திருப்பி அனுப்பல்

மாகாண எல்லையை மீறிய 329 வாகனங்கள்; 783 நபர்கள் திருப்பி அனுப்பல்-Inter-Provincial-Travel-Restriction-329-Vehicles-783-Persons-Sent-Back

மேல் மாகாண எல்லையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மாகாண எல்லை பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த 326 வாகனங்களை பொலிஸார் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அத்துடன் பயணக்கட்டுப்பாட்டை மீறி மாகாண எல்லையை மீறிய 783 பேர் திருப்பியனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச்சாவடிகளில் மேற்கொண்ட சோதனையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தலைமையகம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய
- வாகனங்கள் 982
- நபர்கள் 1,478

மேல் மாகாணத்திற்குள் நுழைந்த
- வாகனங்கள் 708
- நபர்கள் 1,284

உரிய அனுமதியின்றி திருப்பியனுப்பப்பட்ட
- வாகனங்கள் 326
- நபர்கள் 783

நீண்டு விடுமுறையைத் தொடர்ந்து, மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி வரை இறுக்கமாக கடைப்பிடிக்கவுள்ளதாக, ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட்-19 செயலணிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.