கிழக்கில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடு ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு

கிழக்கில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடு ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு-Re-Opening Eastern Province Schools Pre Arrangements-Anuradha Yahampath

எதிர்வரும் 21 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக முன்னேற்பாடு நடவடிக்கைகளை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வெள்ளிக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த முன்னேற்பாடு நடவடிக்கையின் கீழ் திருகோணமலை 4 ஆம் கட்டையில் அமைந்துள்ள சுமந்தபுர ஆரம்ப பாடசாலையின் சுற்றாடல் சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது. மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள 200 இற்கும் குறைவாக மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் இவ்வாறான வேலைத்திட்டங்களை பாடசாலை சமூகம் முன்னெடுக்க வேண்டுமென இதன்போது ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண பணிப்பாளர் பிள்ளை நாயகம், மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தரிச பாண்டிகோரல, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலபதி உட்பட பலர் கலந்து கலந்துகொண்டனர்.

கிண்ணியா மத்திய நிருபர்