தாய்வானில் 13 மாடி குடியிருப்பு கட்டட தீயில் 46 பேர் பலி

தாய்வானில் 13 மாடி குடியிருப்பு கட்டட தீயில் 46 பேர் பலி-Taiwan Building Fire-46 Killed

தாய்வானில் 13 மாடி குடியிருப்பு கட்டட தீயில் 46 பேர் பலி-Taiwan Building Fire-46 Killedதாய்வானின் தெற்கு பகுதியிலுள்ள 13 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.00 மணியளவில் யான்செங் (Yancheng) மாவட்டத்திலுள்ள காஹ்சியங் (Kaohsiung) நகரத்தில் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தீயை கட்டுப்படுத்த 377 மீட்புப் பணியாளர்கள், 139 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் 8 வயது முதல் 83 வயதைச் சேர்ந்த 62 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்டடத்தில் 100 இற்கும் அதிகமான சிரேஷ்ட பிரஜைகள், உடல் ஊனமுற்றவர்கள் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாய்வானில் 13 மாடி குடியிருப்பு கட்டட தீயில் 46 பேர் பலி-Taiwan Building Fire-46 Killed