மெக்சிகோ, கனடா எல்லையை திறப்பதற்கு அமெரிக்கா முடிவு

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு எதிர்வரும் நவம்பரில் அமெரிக்கா தனது மெக்சியோ மற்றும் கனடா நாட்டு எல்லைகளை திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

அத்தியாவசியமற்ற நோக்கத்திற்காக தரை மற்றும் படகு வழியாக எல்லை கடந்து வருபவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எந்தப் பயணங்களுக்கும் 2022 ஜனவரி தொடக்கம் தடுப்பூசி பெற்ற அத்தாட்சி கட்டாயப்படுத்தப்படவுள்ளது.

கொரோனா பெருந்தொற்ற காரணமாக 2020 மார்ச் தொடக்கம் அமெரிக்கா தனது வடக்கு மற்றும் தெற்கு அண்டை நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடு கொண்டுவந்தது.

எனினும் முழுமையாக தடுப்பூசி பெற்ற வெளிநாட்டு விமானப் பயணிகளுக்கு வரும் நவம்பர் தொடக்கம் கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாக அண்மையில் முடிவெடுத்தது.

கொரோனா தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அமெரிக்காவில் 42 மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இந்த நோய்த் தொற்றினால் அந்நாட்டில் 670,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.