கொலம்பஸ் சிலையை நீக்குகிறது மெக்சிகோ

மெக்சிகோ தலைநகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸின் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தில் பழங்குடிப் பெண் ஒருவரின் சிலை நிறுவப்படும் என்று அந்த நகர ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

பழங்குடி உரிமை செயற்பாட்டாளர்கள் கொலம்பஸ் சிலையை உடைக்கப்போவதாக எச்சரித்ததை அடுத்து அந்த சிலை கடந்த ஆண்டு அகற்றப்பட்டது.

இந்நிலையில் அமஜக் இளம் பெண் என்று அறியப்படும் கொலம்பஸுக்கு முந்திய சிலையின் பிரதி ஒன்று வைக்கப்படவிருப்பதாக மெக்சிகோ சிட்டி நகர மேயர் கிளோடியா செயின்பவும் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டக்காரர்களால் அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருக்கும் கொலம்பஸ் சிலைகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் பிறந்த கடலோடியான கொலம்பஸ் ஸ்பானிய மன்னரின் நிதி உதவியுடன் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவை அடைந்தார்.

இது அமெரிக்காவில் ஸ்பானிய ஆக்கிரமிப்புக்கு வழி வகுத்தது. கொலம்பஸை பலரும் அடக்குமுறை மற்றும் காலநித்துவத்தின் அடையாளமாக பார்க்கின்றனர்.