அமெரிக்க பிரபல குற்றவாளி கபோனின் பொருட்கள் ஏலம்

அமெரிக்காவின் பிரபல குற்றக் கும்பல் தலைவன் அல் கபோனுக்கு சொந்தமான பொருட்கள் 3 மில்லியன் டொலருக்கு ஏலம்போயுள்ளது. கலிபோர்னியாவில் கடந்த வார இறுதியில் இந்த ஏல விற்பனை இடம்பெற்றுள்ளது.

இதில் துப்பாக்கிகள், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆபரணங்கள், தளபாடங்கள் உட்பட சுமார் 174 பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.

இதில் கபோனின் விருப்பமான துப்பாக்கி 860,000 டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. இது ஏல விற்பனையில் துப்பாக்கி ஒன்று விலைபோன அதிக தொகையாகும். சிக்காகோவைச் சேர்ந்த அல் கபோன் 1920களில் பிரபல குற்றவாளியாக இருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் முதல் குற்றவாளியாக அவர் இருந்துள்ளார்.

1947 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த பின் கடந்த 75 ஆண்டுகளாக அவரது சொத்துகள் அவரது குடும்பத்தினரிடமே இருந்து வந்தது.

அல் கபோனின் தற்போது உயிருடன் இருக்கும் மூன்று பேத்திகளில் ஒருவரான டயானா கபோன் தாம் வயது முதிர்ச்சியை எட்டுவதால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார்.