தொலைபேசி இலக்கத்தை மாற்றாது வலையமைப்பை மாற்றும் வசதிக்கு சட்ட அனுமதி

தொலைபேசி இலக்கத்தை மாற்றாது வலையமைப்பை மாற்றும் வசதிக்கு சட்ட அனுமதி-Legal Approval Granted for Number Portability-Oshada Senanayake

- ஒரே தொலைபேசி இலக்கம் மூலம் வெவ்வேறு வலையமைப்பு

பாவனையாளர்கள் தமது தொலைபேசி இலக்கத்தை மாற்றாது, வேறு தொலைபேசி வலையமைப்பிற்கு மாறும் (Number Portability) 'தொலைபேசி இலக்க இலகுவாக்கம்' வசதியை ஏற்படுத்துவதற்கான சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று (14) ஜனாபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பில், நாட்டில் தற்போது தொலைத் தொடர்பு வலையமைப்பின் சேவை மற்றும் அதன் வலையமைப்பு கோபுரங்களின் விஸ்தரிப்பு தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.