வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் கைதான ஐவரும் பிணையில் விடுதலை

வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் கைதான ஐவரும் பிணையில் விடுதலை-Garlic Scam-5 Person Released On Bail-4 Sathosa Staff & Business Man

லங்கா சதொசா நிறுவனத்தில் இடம்பெற்ற 54,860 கி.கி. வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, வெள்ளைப்பூடை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படும் வர்த்தகர் உள்ளிட்ட 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்றையதின் (14) வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

இச்சம்பவம் தொடர்பாக லங்கா சதொச நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர், சிரேஷ்ட விநியோக முகாமையாளர், விநியோக முகாமையாளர், மொத்த விற்பனை முகாமையாளர் ஆகியோர் கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், குறித்த வெள்ளைப்பூட்டை கொள்வனவு செய்ததாக, குற்றம் சாட்டப்பட்ட 55 வயதான குறித்த வர்த்தகர் கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி CID யினால் கைது செய்யப்பட்டதோடு. அவருக்கும் இன்று (14) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.