கொழும்பு கோட்டையிலுள்ள மாடிக் கட்டடமொன்றில் பல்வேறு தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு கோட்டையிலுள்ள மாடிக் கட்டடமொன்றில் பல்வேறு தோட்டாக்கள் மீட்பு-T56 & 9mm Bullets Found in Bristol Street-Colombo Fort

கொழும்பு, கோட்டை, பிரிஸ்டல் வீதியில் உள்ள 5 மாடி கட்டடமொன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு வகையான 205 தோட்டாக்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய,குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் T56 தோட்டாக்கள் 176 மற்றும் 9 மி.மீ. தோட்டாக்கள் 29 ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்டடத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி ஒருவர் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த தோட்டாக்கள் பார்த்துள்ள நிலையில் அது பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸாருடன் இணைந்து, கொழும்பு குற்றப்பிரிவு (CCD) பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.