முல்லைத்தீவில் இரு வேறு இடங்களில் வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவில் இரு வேறு இடங்களில் வெடிபொருட்கள் மீட்பு!-Explosives Found in Mullaitivu

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் தனியார் ஒருவரின் காணி ஒன்றில் நிலத்தினை விவசாய நடவடிக்கைக்காக பண்படுத்தும்போது நிலத்தில் இருந்து சில வெடிபொருட்களை உரிமையாளர்கள் இனம் கண்டுள்ளார்கள்.

இது குறித்து காணியின் உரிமையாளர்களால் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொலிஸார் அதனை மீட்டுள்ளார்கள். துப்பாக்கி ரவைகள், கனரக துப்பாக்கி ரவைகள், எறிகணைகள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன. வெடிபொருட்கள் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு பகுதியிலும் தனியார் காணி ஒன்றில் இருந்து மிதிவெடி ஒன்று இனம் காணப்பட்டுள்ளது.

அதனையும் மீட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் இரு வேறு இடங்களில் வெடிபொருட்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்