பருத்தித்துறையில் 35 கி.கி. கஞ்சாப் பொதிகள் மீட்பு

பருத்தித்துறையில் 35 கி.கி. கஞ்சாப் பொதிகள் மீட்பு

பருத்தித்துறை சக்கோட்டை கடல்பகுதியில் வைத்து 35 கிலோ கஞ்சாப்பொதிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து நேற்றையதினம் சக்கோட்டை கடல் பகுதிக்கு பொலிஸார் சென்று தேடுதல் நடத்தினார்கள்.

அதன் போது கைவிடப்பட்ட படகு ஒன்றிலிருந்து 35கிலோவுக்கு அதிகமான நிறை கொண்ட கஞ்சாப்பொதிகளைக் கைப்பற்றினார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை

கரவெட்டி தினகரன் நிருபர்