விலை கொடுத்து வாங்கும் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்வது நமது உரிமை உலக தர நிர்ணய தினம் இன்று

உலக தர நிர்ணய தினம் இன்று அக்டோபர் -14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. சந்தையில் விற்கப்படும் பொருட்கள் தரமானவை என்று சான்றளிக்கும் நிறுவனங்களான ISO(International Organization for Standardization), IEC,ITU ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து 1969 ஆம் ஆண்டிலிருந்து ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதியை உலக தர நிர்ணய தினமாக கடைப்பிடித்து வருகின்றன.

விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். அது தரமானதுதானா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது நமது உரிமை.நாம் வாங்கும் பொருட்களின் தரம் பற்றி நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வை இந்நாளில் நாமும் பெற்று, அனைவருக்கும் ஏற்படுத்துவோம்.

உணவுப் பொருட்களின் தரம் மற்றும் உணவைப் பயன்படுத்தும் நுகர்வோரின் உரிமைகளைக் காப்பது போன்ற பணிகளுடன் உலக அளவில் உணவுப் பொருட்களுக்கு தரச் சான்று வழங்கும் பணிகள் இதற்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தரம் என்பது கடைப்பிடித்தே தீர வேண்டிய பொதுநெறிமுறை என்பதை ஒவ்வொரு உற்பத்தியாளரும் உணரும் விதத்திலும், தரமான உணவினைப் பெறுதல், அதற்கான தொகையினை செலுத்தும் நுகர்வோரின் உரிமை என்பதையும் உணரும் வகையில் ஒவ்வொருவரும் இந்த உலக தர நிர்ணய நாளில் உறுதி ஏற்பது அவசியம்.

உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, ஒக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. உலகத் தர நிர்ணய தினம் 1970ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என தர நிர்ணய அமைப்பு கூறுகிறது.

தர நிர்ணய அமைப்பு( ISO)தற்போது சுமார் 130 உறுப்பு நாடுகளுடன் செயல்படுகிறது.கடந்த 1946ம் ஆண்டு இதே நாளில்தான் லண்டனில் 25 நாடுகள் கூடி, உலக அளவில் தர நிர்ணயத்தின் அவசியம் குறித்து விவாதித்தன. அதன் விளைவாக சர்வதேச தர நிர்ணய அமைப்பும் உருவானது. இதை நினைவு கூரும் விதமாக இந்த நாளில் உலக தர நிர்ணய தினம் உள்ளது.

உணவுப் பொருட்களின் தரம் மற்றும் உணவினை பயன்படுத்தும் நுகர்வோரின் உரிமைகளை காப்பது போன்ற பணிகளுடன் உலக அளவில் உணவுப் பொருட்களுக்கு தர சான்று வழங்கும் பணியினையும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.