கிருமி கொல்லியை உட்கொண்ட ஈரான் கைதிகள் 12 பேர்; இருவர் பலி

கிருமி கொல்லியை உட்கொண்ட ஈரான் கைதிகள் 12 பேர்; இருவர் பலி-2 Iranian Inmates Died & 10 others Admitted to Prison Hospital

- ஈரானிய தூதரக அதிகாரிகள் வழங்கிய கிருமி கொல்லி திரவம்

கொழும்பு ரிமாண்ட் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 ஈரானிய பிரஜைகள் கிருமி கொல்லி மருந்தை அருந்தியதில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலை ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களில் ஏனைய 10 பேர் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபர்களை, நேற்றையதினம் (13) ஈரானிய தூதரக அதிகாரிகள் வந்ததாகவும் அவர்கள் அவ்வேளையில் கிருமி கொல்லி திரவத்தை வழங்கியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.