காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெறாது

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெறாது-Karaitivu Sri Badrakali Amman Kovil Thee Mithippu Will Not Happen

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் நாளை (15) நடைபெறாது என ஆலய பரிபாலன சபைத் தலைவர் கலாபூசணம் வித்தகர் சி. இராமநாதன் தெரிவித்தார்.

இவ்வாலய வருடாந்த தீமிதிப்பு மஹோற்சவம் கடந்த 05ஆம் திகதி சமுத்திரதீர்த்தம் கொண்டு வரப்பட்டு கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

கொரோனா காரணமாக ஆலய நிருவாகிகள் மற்றும் தின உபயகாரர்கள் மட்டும் கலந்துகொண்ட தினச்சடங்குகள் இடம்பெற்றுவந்தன.

பொதுவான பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இவ்வாலயத்தின் சிறப்புகளில் ஒன்றான தீமிதிப்பு இவ்வருடம் கொரோனா காரணமாக இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு குறூப் நிருபர்)