கொழும்பு மாவட்டத்தின் அனைத்து வலயங்களிலும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) Pfizer தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, 18 - 19 வயது மாணவர்களுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளில் Pfizer தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கும் திட்டத்தை, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் முன்னோடித் திட்டமாகவே எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை, க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கொழும்பு மாவட்டத்தில் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அனைத்து மாணவர்களும் தங்களது ஆளடையாள அட்டைகளுடன் தடுப்பூசியைப் பெறுமாறு, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசே தெரிவித்தார்.