ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக செயற்பாடுகள் இரு மடங்காக அதிகரிப்பு

ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக செயற்பாடுகள் இரு மடங்காக அதிகரிப்பு -Singapore Foreign Minister Vivian Balakrishnan

- சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்' திட்டம்,  மக்களின் வாழ்வை மேம்படுத்த டிஜிட்டல் மயமாக்கல் உதவும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய - ஆசியான் வர்த்தக மாநாட்டின் அங்குரார்ப்பண அமர்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் பாலகிருஷ்ணன், கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் டிஜிட்டல் மயமாக்கல் துரிதப்படுத்தப்பட்டுள்ளமையைப் பாராட்டியுமுள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்களுக்காக  அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்  கீழ், ஒவ்வொரு இந்தியரும் இந்த அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதோடு, இவ்வட்டை தனிப்பட்ட சுகாதார பதிவுகளை இணைக்கக்கூடிய ஒரு சுகாதாரக் கணக்காகவும் செயற்படும். டிஜிட்டல் சுகாதார  சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் செயல்படக்கூடிய வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பயனாக குடிமக்கள் சுகாதார பராமரிப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்ள ஒரு 'கிளிக்' செய்தால் போதுமானதாக இருக்கும் என்று ஏ.என்.ஐ குறிப்பிட்டுள்ளது.

'மெய்நிகர்' ஊடாக நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண அமர்வில் வெளிவிவகார அமைச்சர் பாலக்கிருஷ்ணன்,  'ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துக்கூறியதோடு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை வலுப்படுத்திய சமீபத்திய நகர்வுகள் தமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

'ஆசியானுடனான இந்தியாவின் அதிகரித்த ஈடுபாட்டை, அதன் கிழக்கு கொள்கை மற்றும் புதிய துறைகளிலான விரிவுபடுத்தல்களுடன் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த காலங்களில் இந்தியாவுக்கும்  சிங்கப்பூருக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் பெறுமதி குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளன. குறிப்பாக 2010 இல் ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பமானது முதல்  வர்த்தக செயற்பாடுகள் சுமார் இருமடங்காக வளர்ச்சி பெற்று 2019 இல் 77 பில்லியன் டொலர்களாக விளங்குகியது.  கொவிட் -19 தொற்று காலத்திலும் கூட, இந்தியாவும் ஆசியானும் விநியோகக் கட்டமைப்பை பேணவும்  அத்தியாவசியப் பொருட்களுக்கான ஏற்பாடுகளை எளிதாக்கவும் ஒன்றாகப் பணியாற்றின' என்றும் கூறினார்.