வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்-Jeevan Thiyagarajah Sworn in as Governor of the Northern Province

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதுவரை காலமும் வட மாகாண ஆளுநராக திருமதி, பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீ. சரோஜினி சார்ள்ஸ் 2019 டிசம்பர் 30ஆம் திகதி வட மாகாண ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள உத்தியோகத்தரான திருமதி சார்ள்ஸ், கடந்த 27 வருடங்களாக அரச சேவையில் பணிபுரிந்து வருகிறார். சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய அவர், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களின்  அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான பீ.எஸ்.எம். சார்ள்ஸ், பேராதனை மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களில், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வர்த்தக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் இரு முதுமாணி பட்டங்களை பெற்றுள்ளார்.

அத்துடன் கடந்த 2019 நவம்பர் 27ஆம் திகதி 20 புதிய அமைச்சுகளின் செயலாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளராக சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்-Jeevan Thiyagarajah Sworn in as Governor of the Northern Provinceவட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்-Jeevan Thiyagarajah Sworn in as Governor of the Northern Province

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்-Jeevan Thiyagarajah Sworn in as Governor of the Northern Province