ரிஷாட் பதியுதீனுக்கு ஒக்டோபர் 14 வரை விளக்கமறியல் நீடிப்பு

ரிஷாட் பதியுதீனுக்கு ஒக்டோபர் 14 வரை விளக்கமறியல் நீடிப்பு-Rishad Bathiudeen Re-Remanded Till October 14 Under PTA

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்வுத்தரவை விடுத்துள்ளது.

கடந்த 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் ரிஷாட் பதியுதீன் எம்.பி. கைது செய்யப்பட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு 16 வயது டயகம சிறுமி ஹிஷாலினி ஜூட் குமார் எரிகாயங்களுடன் மரணமடைந்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.