சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஒக்டோபர் 15 முதல் புகையிரத போக்குவரத்து

சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஒக்டோபர் 15 முதல் புகையிரத போக்குவரத்து-Train Services will Begin From Oct 15 With Health Guidelines

சுகாதாரத் துறையின் வழிகாட்டல்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (07) ஹட்டன் புகையிரத நிலையத்தில் புகையிரத பாதை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்ட புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர, ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.