3 மில்லியன் பார்வையிடலை தாண்டிய லிப்ட் பட பாடல்

- சிவகார்த்திகேயனின் பாடலுக்கு கவின் நடனம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததின் மூலம் பிரபலமடைந்தவர் கவின். பிறகு வெள்ளித்திரையில் நட்புனா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்பு பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். ஈகோ என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் லிப்ட் படத்தில் கவின் ராஜ் நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.லிப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை முன்னணி இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இப்படத்தின் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படம் ஒக்டோபர் 01 ஆம் திகதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியானது. லிப்ட் படத்தில் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘இன்னா மயிலு’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்னா மயிலை பாடலுக்கு கவின் நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தற்போது வைரல் ஆகியுள்ளது.

இப்படம் வெளியாவதற்கு முன்னர் கடந்தகடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட இப்பாடல் மேலும் பிரபலமடைந்து, தற்போது வரை 30 இலட்சத்திற்கும் (3 மில்லியனுக்கும்) அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

இப்படம் வெளியாவதற்கு முன்னர் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட Lyric வீடியோ தற்போது வரை 3.1 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.