ஒக்டோபர் 04 முதல் கைதிகளை பார்வையிட வாய்ப்பு

ஒக்டோபர் 04 முதல் கைதிகளை பார்வையிட வாய்ப்பு-Visitors Allowed to Visit Prisoners-from Oct 04

எதிர்வரும் திங்கட்கிழமை, ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து சிறைகளிலுமுள்ள கைதிகளை பார்வையிட மீண்டும் உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் கொவிட்-19 தொற்றுநோய் பரவலின் உக்கிரத்தை தொடர்ந்து, கடந்த ஒகஸ்ட் முதல் கைதிகளை பார்வையிடுவதை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றையதினம் (01) முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலைகளைப் பார்வையிடுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய கைதிகளை பார்வையிடுவது தொடர்பான செயன்முறையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் முற்றிலும் இல்லதொழிந்துவிடாத நிலையில், அதற்கமைய, உரிய சுகாதார வழிகாட்டல்களைப் இறுக்கமாக பின்பற்றுமாறு தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் திணைக்களம், இயலுமானவரை E-visit முறை மூலம் ஒன்லைனில் பார்வையிடுவதனை கடைப்பிடிக்குமாறு, சிறைச்சாலைகள் திணைக்களம் கைதிகளின் உறவினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.