அரச ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுற்றுநிருபம்

அரச ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுற்றுநிருபம்-State Employees Recall to the Service-Circular

- ஊழியர்களை அழைக்கும் தெரிவு நிறுவன தலைவரிடம்
- கர்ப்பிணிகள், விசேட தேவைகொண்டோரை அழைக்காதிருக்க ஆலோசனை

அரச ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஸ்தம்பிதமின்றி அரச சேவையை முன்னெடுக்க அவசியமான, அத்தியாவசிய ஊழியர்களை அழைக்கும் தீர்மானம் நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், விசேட தேவைகொண்டவர்களை சேவைக்கு அழைக்காதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மிக அத்தியாவசியமான வேளைகளில் மாத்திரம் அவர்களை சேவைக்கு அழைக்குமாறு தெரிவிக்க்பபட்டுள்ளதுடன், அவ்வாறான வேளைகளில் அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய ஊழியர்கள் ஒன்லைன் முறை மூலம் தங்களது பணிகளை மேற்கொள்ள கடமைப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தடுப்பூசியை பெறாத ஊழியர்களை, அதனை பெறுவதற்கு ஊக்குவிப்பதோடு, தடுப்பூசி பெற்றுக் கொண்டமை தொடர்பான அட்டையை கோருமிடத்து, ஊழியர்கள் அதனை காண்பிப்பது தொடர்பில் அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபம் வருமாறு...

PDF File: